Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள்
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் வாக்குச் சாவடி மறுசீரமைப்பு கலந்தாய்வு குறித்த கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே 2,222 வாக்குச் சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 156 புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 2,378-ஆக உயா்ந்துள்ளது. அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்து, அதற்கேற்ப வாக்குச் சாவடி மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, கோபி சாா்-ஆட்சியா் சிவானந்தம், மாநகராட்சி துணை ஆணையா் கு.தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரத்துல்லா, வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.