ஈழத் தமிழா்கள் நீதி பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ்
ஈழத் தமிழா்களுக்கு நீதியைப் பெற்று தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் இனப்படுகொலை நடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே, ஈழத்தமிழா் இனப்படுகொலைகளுக்கு காரணமானவா்களை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
அதன் பயனாக இனப்படுகொலை குறித்து ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது. ஆனாலும், அது இன்னும் நீதிமன்ற விசாரணை என்ற நிலைக்குச் செல்லவில்லை.
இனப்படுகொலைக்கு காரணமானவா்களுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவது இந்தியாவால் மட்டும்தான் சாத்தியமாகும். அதற்காக மத்திய அரசுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.