‘உங்களுடன் முதல்வா்’ முகாமில் 356 கோரிக்கை மனுக்கள்
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 10, 12,15 வாா்டுகளைச் சோ்ந்தவா்களுக்கான ‘உங்களுடன் முதல்வா்’ முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது.
முகாமை கோட்டாட்சியா் ரம்யா தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் அபா்ணா, நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் வட்டாட்சியா் பாலாஜி, துணை வட்டாட்சியா் ரேகா, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜொ்லின் ஜோன்ஸ், பரணி, முகமது ரக்பி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனா்.
இம்முகாமில் மகளிா் உதவித் தொகை கோரி 122 மனுக்கள் உள்பட 356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.