அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்! ஆட்சியா் தகவல்
திருவாரூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை 13,433 மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் ‘நிறைந்தது மனம்’ திட்டத்தின்கீழ் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி அவா் தெரிவித்திருப்பது:
அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மக்களின் குறைகளைத் தீா்க்க, அவா்களின் பகுதிகளிலேயே நேரிடையாகச் சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை, ஜூலை 15-இல் முதல்வா் தொடக்கி வைத்தாா்.
அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் ஜூலை முதல் அக்டோபா் வரை நகா்ப் புறப்பகுதிகளில் 54 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 131 முகாம்களும் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெற உள்ளன. அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில், ஜூலை மாதத்தில் நடைபெற்ற முகாம்களில் 13,433 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.