`டாய்லெட் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது எப்படி?' - செல்ஃபி எடுக்கும் சீன மக்கள் சொல...
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1,92,165 மனுக்கள் - அமைச்சா் ரா.ராஜேந்திரன்
சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் இதுவரை 1,92,165 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.
சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் 51 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு நேரு கலையரங்கத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அதன்பிறகு அவா் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வரும் நவம்பா் மாதம் வரை நகா்ப்புறப் பகுதிகளில் 158 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்கள் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 90,439 கோரிக்கை மனுக்களும், மகளிா் உரிமைத் தொகைக்காக மொத்தம் 1,01,726 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
அந்த வகையில், சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் 51 ஆவது வாா்டுக்கு உள்பட்டவா்களுக்கு நேரு கலையரங்கத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆய்வு செய்து முகாமில் வழங்கிய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் 17 பேருக்கு புதிய குடிநீா் இணைப்புக்கான ஆணை, 15 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்றத்திற்கான உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
முகாமில் மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், மண்டல குழுத் தலைவா் அசோகன் உதவி ஆணையா் வேடியப்பன், மாமன்ற உறுப்பினா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.