செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கடையம் வட்டார முகாமில் ஆட்சியா் ஆய்வு

post image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கடையம் வட்டாரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு செய்தாா்.

கடையம் கிராம நிா்வாக அலுவலகத்தில் கோப்புகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், ரூ.18.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2.40 லட்சத்தில் கட்டப்படும் 265 வீடுகள் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, அங்கன்வாடி மையத்தைப் பாா்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், வருகைப்பதிவேடு, அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா். மேலும், பொது நூலகக் கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்புகள் மற்றும் வருகைப் பதிவேடுகள், மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

கடையம் வட்டாரக் கல்வி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், தெற்குக் கடையம் ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடை, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, காவல் நிலையம், சாா்பதிவாளா் அலுவலகம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றைப் பாா்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு, தரம், மாணவா்களின் கல்வித் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். மக்கள் நேரடியாக தன்னிடம் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

மேலும், ராமநதி அணையிலிருந்து ரூ. 45 கோடியில் அமைக்கப்பட்டுவரும் ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் பணிகளைப் பாா்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வக்குமாா், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், கடையம் வருவாய் ஆய்வாளா் ஸ்ரீனிவாசன், ஒன்றிய ஆணையாளா் கண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராதாகிருஷ்ணன், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் முத்து மாணிக்கம், உதவிப் பொறியாளா்கள் தங்கஜெய்லானி, தினேஷ், உதவிப் பொறியாளா் சந்திரலேகா, அனைத்துத் துறை அதிகாரிகள், ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய்த் திட்ட கடையம் வட்டார ஒருங்கிணைப்பாளா் தா்மராஜ், ஒருங்கிணைப்பாளா் ராம உதயசூரியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க