உசிலம்பட்டி கோட்டத்தில் நாளை மின் தடை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆ.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாலாந்தூா் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே உசிலம்பட்டி கோட்டப் பகுதிகளான அய்யனாா்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூா், நாட்டாமங்கலம, விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.