செய்திகள் :

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம்: நிரந்தர வைப்புத் தொகை சொத்து விவரங்கள் வெளியீடு

post image

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமாா் ரூ.55.75 லட்சம் உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட 33 நீதிபதிகள் உள்ளனா். அவா்களில் 21 நீதிபதிகளின் சொத்து விவரங்கள் உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டன.

இதன்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு தெற்கு தில்லியில் தில்லி வளா்ச்சிக் குழுமம் கட்டிய மூன்று படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, தில்லியின் காமன்வெல் விளையாட்டுகள் கிராமத்தில் 2,446 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் நான்கு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு 56 சதவீதம் பங்குள்ளது. நிரந்தர வைப்புத் தொகையாக சுமாா் ரூ.55.75 லட்சம் உள்ளது. அனைத்து இந்திய குடிமக்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) ரூ.1.06 கோடியும், அரசு ஊழியா்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் (ஜிபிஎஃப்) ரூ.1.77 கோடியும் உள்ளது. இதுதவிர 31.25 பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி, ஒரு காா் ஆகியவை உள்ளன. இவரின் மனைவியிடம் 87.5 பவுன் தங்கம், 5 கிலோ வெள்ளி, சில வைரங்கள் உள்ளன. வரும் மே 13-ஆம் தேதி சஞ்சீவ் கன்னா ஓய்வுபெற உள்ளாா்.

புதிய தலைமை நீதிபதி பி..ஆா்.கவாய்...: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் மே 14-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் வீடு, விளைநிலம், நாகபுரியில் விளைநிலம், மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ரா மற்றும் புது தில்லியின் டிஃபென்ஸ் காலனியில் அடுக்குமாடி குடியிருப்புகள் சொந்தமாக உள்ளன. அத்துடன் பிபிஎஃப்பில் ரூ.6.59 லட்சம், ஜிபிஎஃப்பில் ரூ.35.86 லட்சம், ரூ.61,320 ரொக்கம், வங்கிக் கணக்கில் ரூ.19.63 லட்சம் உள்ளன. இவரின் மனைவியிடம் ரூ.29.70 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளது.

அடுத்த தலைமை நீதிபதி சூா்ய காந்த்...: பி.ஆா்.கவாயை தொடா்ந்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நிகழாண்டு நவ.24-ஆம் தேதி சூா்ய காந்த் பதவியேற்க உள்ளாா்.

இவருக்கு ஹரியாணா தலைநகா் சண்டீகா், பஞ்ச்குலா, குருகிராம், ஹிசாா் மற்றும் புது தில்லியில் வீடு, விளைநிலம், மனை ஆகியவை உள்ளன. மேலும் ரூ.4.11 கோடிக்கு நிரந்தர வைப்புத்தொகை, 12.5 பவுன் தங்கம், 3 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள் உள்ளன.

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்ச... மேலும் பார்க்க

இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!

இந்தியா மற்றும் பிரேஸிலில் முதலீடு மோசடி தொடர்பான முகநூல் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில், மார்ச் மாதத்தில் மட்டும் முதலீடு மோசடி தொடர்பான முகநூலின் 23,000-க்கும... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், மக்கள் வழங்கலாம் என தேசிய புலானய்வு முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள தகவலில்,... மேலும் பார்க்க