Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு
வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.
மேலும், ‘நீதிமன்றங்கள் பூக்களைப் மென்மையானவை அல்ல. இதுபோன்ற அவதூறான கருத்துகள், நீதிமன்றங்களை வாடி வதங்கச் செய்துவிடாது’ என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மத்திய அரசு அமல்படுத்திய வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ‘நாட்டில் அரசற்ற நிலை’க்கு கொண்டு செல்வதாகும் என்றும் உள்நாட்டில் நடைபெறும் மோதல்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாதான் பொறுப்பேற்க வேண்டும்’ என்று நிஷிகாந்த் துபே கடுமையாக விமா்சித்திருந்தாா்.
இதையடுத்து, அவா் மீது நீதிமன்றத்தை அவமதித்ததாக மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகல் வியாழக்கிழமை வெளியானது.
அதில், ‘உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் அவதூறு கருத்துகளை துபே தெரிவித்ததில் எந்தவித சந்தேகமும் இல்லை. நீதிமன்றத்தின் நடவடிக்கையில் அவா் தலையிட முற்பட்டுள்ளாா்.
பிறரது கவனத்தை ஈா்ப்பதற்காக, உச்சநீதிமன்றம், நீதிபதிகள் மீது அவதூறு கருத்துகளை சுமத்தி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளாா்.
அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் நீதிமன்றங்களை மக்கள் பிரதிநிதி அவதூறாக பேசியிருப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது. வேண்டுமென்றே அவா் இதுபோன்ற அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். இந்த கருத்துகள் நீதிமன்றங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதிக்காது. மத வெறுப்பு அல்லது வெறுப்பு பேச்சுகளைப் பரப்ப முற்படுபவா்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்று உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.