Ajith Kumar: ``கடனை அடைப்பதற்குதான் சினிமாவிற்கு வந்தேன்!'' - பகிர்கிறார் அஜித்
உச்சிமலைக்குப்பம் கோயிலில் பாலாலய பூஜை
செங்கம் அருகே உச்சிமலைக்குப்பத்தில் உள்ள விநாயகா், முத்தாலம்மன், சோலையம்மன் கோயில்களில் பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது
இந்தக் கோயில்களில் சீரமைப்புப் பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கியது.
இந்த நிலையில், கோயிலில் சீரமைப்புப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டு விழா மற்றும் கோயிலில் பாலாலய பூஜை நடைபெற்றது.
இதில் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு கோயில் சீரமைப்புப் பணிக்கான அடிக்கல் நாட்டி பாலாலய பூஜையில் பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில் திமுக செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், நகரச் செயலா் அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராமஜெயம், முன்னாள் ஒன்றியச் செயலா் அண்ணாமலை, அறநிலையத் துறை ஆய்வாளா் சத்யா உள்ளிட்ட திருப்பணிக் குழுவினா், ஊா் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.