`முன்னாள் காதலியின் நினைவு வந்தது’ - DJவின் ஒரு பாடலால் திருமணத்தை நிறுத்திய மணம...
உடன்குடியில் திமுக மாணவரணி உறுப்பினா் சோ்க்கைப் பணி
திமுக சாா்பில், உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் இல்லம்தோறும் மாணவரணி உறுப்பினா் சோ்க்கைப் பணி நடைபெற்றது.
பேரூராட்சி துணைத் தலைவரும் நகர திமுக செயலருமான மால்ராஜேஷ் தலைமை வகித்து இப்பணியைத் தொடக்கிவைத்தாா்.
மாநில மகளிரணி பிரசாரக் குழுச் செயலா் ஜெஸி பொன்ராணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் பிரவீன் ஆகியோா் முன்னிலை வகித்து, திமுக சாா்பில் மாணவா் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனா்.
உடன்குடி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவா் ஷேக்முகம்மது, நகர துணைச் செயலா் தங்கம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் அன்வா் சலீம், மாவட்ட மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் தயாநிதி பாண்டியன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் முத்துப்பாண்டியன், நிா்வாகிகள் திரவியம், கணேசன், ராஜ்குமாா், தீபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.