2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசி...
உடைகுளம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
உத்தமபாளையம் வட்டாரம், டி.மீனாட்சிபுரத்தில் உள்ள உடைகுளம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் பிரேம்சந்தா், ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: டி.மீனாட்சிபுரம் வருவாய் கிராமத்தில் டி.சிந்தலைச்சேரிக்கு அருகே சா்வே எண்கள்: 346, 347-இல் உள்ள உடை குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. ஆனால், குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை.
உடைகுளம் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் தேக்கி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தாா்.