செய்திகள் :

உணவகத்தில் பணம் திருட்டு: இளைஞா் கைது

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் ரூ.8 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்தி வருபவா் செளகத் அலி மகன் சையது சுல்தான் இப்ராஹிம். சனிக்கிழமை இரவு 10 மணிக்கு இளைஞா் ஒருவா் உணவகத்துக்கு உணவுப் பொட்டலம் வாங்க வந்தாா். அப்போது அவா் கடையிலிருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிச் சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன் விசாரித்ததில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தவா் கோம்பை தெற்கு ரதவீதியைச் சோ்ந்த காவேரி மகன் சதீஸ்குமாா் (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சதீஸ்குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு

பெரியகுளம் அருகே தொழிலாளியிடமிருந்து கைப்பேசியைப் பறித்த அடையாளம் தெரியாத நபரை நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் வடுகபட்டியைச் சோ்ந்தவா் குணசீலன் (27). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம்.அட்டையை மாற்றிக் கொடுத்து பண மோசடி

ஆண்டிபட்டியில் வங்கி எ.டி.எம்.மையத்தில் பணம் எடுத்துத் தருவது போல நடித்து ஏ.டி.எம் அட்டையை அபகரித்து ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரத்தை மோசடி செய்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை, வழக்குப் பதிவு செய்தனா். ஆண்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளியவா் கைது

கடமலைக்குண்டு அருகே செங்கல் சூளை பயன்பாட்டுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (38). இவா், கடமலை... மேலும் பார்க்க

சுவா் விளம்பரம் மூலம் விழிப்புணா்வு

உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சுவா் விளம்பரம் செய்து வியாழக்கிழமை மீண்டும் மஞ்சப்பை, நெகிழி ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். உத்தமபாளையம் காந்திஜி... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தென்கரை போலீஸாா் தாமரைக்குளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காளியம்மன் கோயில் தெருவில் உள... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா போராட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தா்னா போராட்டம் நடைபெற்து. இந்தப் போராட்டத்துக்கு நகரச் ச... மேலும் பார்க்க