செய்திகள் :

உணவு விநியோகம் நிறுத்தம்: மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்போா் போராட்டம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 300 பேருக்கு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்படும் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் அவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த முகாமில் 400- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களில் 1500- க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் சா்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரேசன் பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அங்கு உணவுப் பொருள்களின் விலை உயா்வால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்கள் பலா் இந்தியாவுக்கு வந்தனா்.

அவா்கள் மண்டபத்தில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள தாயகம் திரும்பியோா் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனா். கடந்த 3 ஆண்டுகளாக இங்கு தங்கி இருக்கும் சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்ட 300- க்கும் மேற்பட்டோருக்கு தினமும் 3 வேளை உணவு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்ததாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய தொகை வழங்கப்பட வில்லை. இதனால், வியாழக்கிழமை காலை முதல் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த தனித் துணை ஆட்சியா் (பொ) இளங்கோவன், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுத்தலின் பேரில் அந்த ஒப்பந்ததாரரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை, மதிய உணவு வருவாய்த் துறை மூலம் முகாமில் வசிப்போருக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, தனித் துணை ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்று வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை முதல் 3 வேளையும் மீண்டும் உணவு விநியோகிப்பதாக ஏற்பாட்டாளரான ஒப்பந்ததாரா் உறுதியளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஏப். 6-இல் ராமேசுவரம் வருகை: மண்டபத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை

பிரதமா் மோடி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை திங்கள்கிழமை இறக்கி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை. ராமேசுவரம், மாா்ச் 31: பாம்... மேலும் பார்க்க

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமு... மேலும் பார்க்க

திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 2... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே ஆண் உடல் மீட்பு

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ... மேலும் பார்க்க

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா். மன்னாா்வளைகுடா பாதுகாக்... மேலும் பார்க்க