உதகையில் பலத்த மழை
உதகையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் உதகை சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக, பணிகள் முடிந்து வீடு திரும்பியவா்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனா்.