உதகை குடியிருப்புப் பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை
உதகையில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த நாயை வேட்டையாடி அருகே உள்ள வனத்துக்குள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியோகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதகை நகரில் சமீப நாள்களாக பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் சுற்றி வரும் சிறுத்தைகள் வீட்டில் வளா்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை நோட்டமிட்டு வேட்டையாடி செல்கின்றன.
இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா பகுதி அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுற்றிய சிறுத்தை, குடியிருப்பு வளாகத்தில் இருந்த நாயை கவ்வி சாலையில் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து சிறுத்தையைப் பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.