Vikatan Digital Awards 2025: `பொருளாதாரப் புலி - Finance With Harish' - Best Fin...
உதகை, குன்னூரில் பரவலாக மழை
உதகை, குன்னூா் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது.
உதகை, குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதைத் தொடா்ந்து பிற்பகலில் உதகை, குன்னூா், குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை முதல் தொடா் சாரல் மழை பெய்தது. இதோடு மூடுபனியும், கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
உதகை - மஞ்சூா் சாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். பல இடங்களில் மூடுபனி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். பனி மூட்டம் காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.