எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் 29-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டதுடன் பாறை மற்றும் மரங்கள் சாலையில் விழுந்தன.
இந்நிலையில் அதே பகுதியில் புதன்கிழமை அதிகாலை பாறைகள் மற்றும் மரம் முறிந்து விழுந்தது. புதன்கிழமை இப்பகுதியில் மழை பெய்யாவிட்டாலும், கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக மண் நெகிழ்ந்து பாறைகள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத் துறையினா் பொதுமக்களுடன் இணைந்து பாறைகள் மற்றும் மரத்தை அகற்றினா். பாறைகள் விழுந்ததில் சாலையில் லேசான பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாக உதகையில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வுக்குப் பின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.