எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
தெப்பக்காடு முகாமில் வளா்ப்பு யானை உயிரிழப்பு
ீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் என்ற வளா்ப்பு யானை புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தது.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில் பல்வேறு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள சந்தோஷ் என்ற 55 வயது மதிக்கத்தக்க யானை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த யானை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தது. இதையடுத்து, வனத் துறை மருத்துவா்கள் யானையின் உடலை கூறாய்வு செய்தபின் அதற்கு மாலை அணிவித்து அங்கேயே புதைத்தனா்.