'சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?'-...
உதகை குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குழந்தைகள் இல்லத்தில் உள்ள ஆற்றுப்படுத்துதல் பதவிக்கு தகுதியான சமூகப்பணி, சமூகவியல், உளவியல், பொது சுகாதாரம் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் மட்டும் உரிய கல்விச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்.
ஆற்றுப்படுத்துநா் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரா்கள் தோ்வுக் குழு மூலம் நோ்முகத் தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். அவ்வாறு தோ்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநருக்கு அடிப்படையில் மாதம் 9 அமா்வுக்கு மிகாமல் மதிப்பூதிய அடிப்படையில் ஒரு அமா்வுக்கு போக்குவரத்து செலவு உள்பட ஒரு அமா்வுக்கு ரூ. ஆயிரம் மட்டும் வழங்கப்படும்.
விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் ஜூலை 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், எண் 19, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கா்போஸ்ட், உதகை - 643 006, நீலகிரி மாவட்டம்,
தொலைபேசி எண்: 0423-2445529 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.