செய்திகள் :

உதய்பூர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: என்ன காரணம்?

post image

உதய்பூர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2022-இல் நிகழ்ந்த கன்னையா கொலை வழக்கை மையப்படுத்தி படமாக்கப்பட்டுள்ள ‘உதய்ப்பூர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளரான அமித் ஜானிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று ஒரு தரப்பால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜக தீவிர ஆதரவாளரான நுபுர் ஷர்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் விதத்தில் வெளியிட்ட கருத்தால் உலகளவில் கண்டனத்தை ஈர்த்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக விடியோ வெளியிட்ட தையல்காரர் கன்னையா கொல்லப்பட்டார். இதை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளதால் தைடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனினும், படத்திலுள்ள சில ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமித் ஜானியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அமித் ஜானிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளாதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஞயிற்றுக்கிழமை(ஜூலை 27) தெரிவித்துள்ளன.

அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன் - புகைப்படங்கள்

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிவரும் டூட் படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா பைஜூவும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார்... மேலும் பார்க்க

‘ஏஐ + இசை’ ஏ.ஆர்.ரஹ்மான் - ஆல்ட்மன் சந்திப்பின் பின்னணி!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கோலோச்சும் ‘ஓபன்ஏஐ’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மனை ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் சந்தித்து பேசினார். இந்த படங்களை அவர் இன்று(ஜ... மேலும் பார்க்க

சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகும் ‘கருப்பு’ டீசர்!

‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகவிருக்கிறது. இந்த தகவலை படக்குழு இன்று(ஜூலை 21) வெளியிட்டுள்ளது. ஆர். ஜே. பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக... மேலும் பார்க்க

அக்யூஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.... மேலும் பார்க்க

தலைவன் தலைவி டிரெய்லர்!

விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது. கலகலப்பு, எமோஷனல், காமெடி என ஒரு முழுமையாக ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் களத்துக்கான வாய்ப்பை கொண்ட படம். மேலும் பார்க்க