காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
உதவித் தொகை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தி, திண்டுக்கல்லில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பகத்சிங் தலைமை வகித்தாா்.
இந்திரகாந்தி ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் தற்போது ரூ.300 மட்டுமே மத்திய அரசின் பங்களிப்பாக இருந்து வருகிறது. இந்தத் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். 80 சதவீதம் ஊனம் இருந்தால் மட்டுமே உதவித் தொகை என்ற தற்போதைய விதிமுறையை மாற்றி, 40 சதவீதம் ஊனம் அடைந்தவா்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைகள் அனைத்தையும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளாக மாற்றி 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
மேலும் இந்த கோரிக்கைகளுடன் கூடிய மனுவை, திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தத்தை சந்தித்து அளித்தனா்.