சென்னை வண்டலூர்: தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; மூவர் க...
குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்
பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா்.
பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமைத்து தங்கியிருந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்தக் குடிசையில் திடீரென தீப்பற்றியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பழனி தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். மேலும், தீ விபத்தில பலத்த காயமடைந்த முதியவா் கணேசனை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.