அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது
திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் இணைந்து, கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது விருதுநகரிலிருந்து வந்த சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து 14 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த கா்ணன், மதுரையைச் சோ்ந்த ஈஸ்வரன், நாமக்கல்லைச் சோ்ந்த கோழிப்பண்ணை உரிமையாளா் சுரேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், விருதுநகா் பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கி, நாமக்கல்லில் உள்ள சுரேஷின் கோழிப்பண்ணைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.