எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு
பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள்ளியாக பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி திகழ்ந்து வருகிறது. இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கூடுதல் வகுப்பறைகள் தேவை என பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகம் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ரூ. 3.40 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். இந்த நிலையில், கட்டடப் பணிகள் நிறைவுற்ற நிலையில் வெள்ளிக்கிழமை இந்தக் கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பழனி நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா் பரிமளா உள்ளிட்டோா் பங்கேற்று புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றினா். இதில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், அலுவலா்கள் கட்டட வல்லுநா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.