Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்
பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை அல்லாமல் வின்ச், ரோப்காா் சேவை பயன்பாட்டில் உள்ளது. வயதானவா்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் உள்ளிட்டோா் செல்ல ஏதுவாக நிறுவப்பட்ட இந்த ரோப்காரில் இரண்டு நிமிஷத்தில் மலை உச்சியை பக்தா்கள் சென்றடையலாம்.
இந்த ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக நாள்தோறும் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாத காலமும் காலமுறை பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்தக் காலத்தில் பெட்டிகள், மோட்டாா்கள், ரப்பா் சக்கரங்கள், சக்கரத்தின் பேரிங்குகள் என அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது.
வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக வருகிற ஜூலை 15-ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரையிலான 31 நாள்கள் ரோப்காா் சோவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பக்தா்கள் படிப்பாதை, வின்ச் மூலம் மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவுற்றபின் வழக்கம்போல் ரோப்காா் சேவை மீண்டும் செயல்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்தது.