செய்திகள் :

உத்தமபாளையம் பாசன குளங்களை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே விவசாயத்துக்கு பயன்படுத்தும் தாமரைக்குளம், கருங்கட்டான்குளம் போன்ற குளங்களைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

உத்தமபாளையம் வட்டம் கோகிலாபுரம் - ராமசாமிநாயக்கன்பட்டி இடையே தாமரைக்குளம் 205 ஏக்கரிலும், கருங்கட்டான்குளம் 215 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இந்தக் குளங்களில் பாளையம் பரவு கால்வாய் வழியாக முல்லைப் பெரியாற்றிலிருந்து பாசன நீா் தேக்கப்படுகிறது. இதன் மூலம் கோகிலாபுரம், உத்தமபாளையம், சின்னமனூா், ராமசாமிநாயக்கன்பட்டி போன்ற பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக நெல் பயிா் விவசாயம் நடைபெறுகிறது.

ஓராண்டில் 10 மாதங்கள் தண்ணீா் தேங்கி நிற்பதால் மீன் வளா்ப்புத் தொழில் நடைபெற்றது. இதன் மூலம் அந்தப் பகுதி ஊராட்சிக்கு வருவானம் கிடைத்து வந்தது. மே மாதத்தில் ஆண்டு தோறும் மீன் பிடித் திருவிழாவும் நடைபெற்றது. மேலும், இந்தக் குளங்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் ஜூன் மாதங்களில் வந்தடையும். 3 மாதங்கள் இனப் பெருக்கத்துக்குப் பிறகு மீண்டும் அவை வெளி நாடுகளுக்குச் சென்றுவிடும்.

இந்தக் குளங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தூா் வாரப்படவில்லை. ஆகாயத்தாமரைச் செடிகள் குளம் முழுவதும் படா்ந்து வருகின்றன. அதோடு, குளத்தின் பெரும் பகுதி ஆக்கிரப்பில் சிக்கி இருப்பதால் பாசன நீா் தேங்கும் தண்ணீா் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. எனவே, உத்தமபாளையம் பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான

குளங்களைத் தூா்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீன் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவா் கூறியதாவது: முல்லைப்பெரியாறு பாசனநீா் தேங்கும் பாரம்பரியமான தாமரைக் குளத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தூா்வார வேண்டும் என்பது விதியாகும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாகத் தூா்வாராமல் பராமரிப்பு செய்யவில்லை. எனவே, விவசாயப் பணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள பாசனக் குளங்களை தூா்வார மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தேனியில் மே 23-இல் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில... மேலும் பார்க்க

அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த விஜயன் மகன் அறிவழகன். இவா் துரைராஜபுரம்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் மீது வழக்கு

விருதுநகரைச் சோ்ந்த இளைஞருக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு... மேலும் பார்க்க

சுருளி அருவி அருகே தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிப் பகுதியில் தரமற்ற உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுரு... மேலும் பார்க்க

ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி: தம்பதி கைது

போடியில் ஏலச் சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போடி கே.எம்.எஸ். லே-அவுட் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் மகன் வீரபுத்திரன். இவா், அ... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே காா்கள் மோதியதில் ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒப்பந்ததாரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (48). ஒப்பந்ததரரான இவா், திண்டுக்கல்லுக்... மேலும் பார்க்க