செய்திகள் :

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

post image

உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமோலி மாவட்டத்தின் தாராலியில், நேற்று (ஆக.22) நள்ளிரவு ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டமைப்புகளினுள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வாகனங்கள் மற்றும் இடிபாடுகள் முழுவதும் நிரப்பியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தாராலியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் இடிபாடுகள் சூழ்ந்துள்ளதால், அங்கு மீட்புப் படைகள் செல்வதற்கு தாமதமாவதாகக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, தற்போது அங்கு மாநில, தேசிய மீட்புப் படைகள் முடக்கங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 20 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் ஒரு முதியவர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம், உத்தரகண்டின் டெஹ்ராடூன், தெஹ்ரி, பௌரி கார்வால், உத்தரகாசி, சமோலி, ருத்ராபிரயாக், நைனிடல், அல்மோரா மற்றும் உத்தம் சிங் நகர், ரிஷிகேஷ் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

Army forces have reportedly been deployed to rescue people affected by floods caused by heavy rains triggered by cloudbursts in Dharali, Chamoli district of Uttarakhand.

கிரிக்கெட் மட்டைக்காகச் சண்டை: 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன்!

கிரிக்கெட் மட்டையைத் திருடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதியிலுள்ளதொரு வீட்டில் 10 வயது சிறுமியொரு... மேலும் பார்க்க

ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள்: கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளாலே முடக்கம்! -அமைச்சர் கிரண் ரிஜிஜு

ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தை ... மேலும் பார்க்க

மே. வங்கத்தில் 2026 பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தம்: புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, ஆக. 29 அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம்! விரைவில் வேறு இடத்துக்கு மாற்றம்!

புது தில்லி: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம் விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.புது தில்லியில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தின் முக்கியமான நுழைவாயிலான ‘கஜ்தார்’ பகுதியிலுள்ள... மேலும் பார்க்க

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் குப்பைத் தொட்டியில் 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் கழிப்பறையின் குப்பைத் தொட்டியில் இருந்து 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூருக்கும் எல்டிடி-க்கும் இடையே தினமும் குஷிநகர் எக்ஸ்பிரஸ்... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் பற்றாக்குறை மாறி, ஜனநாயகத்தில் பற்றாக்குறையான சூழல்! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவில் இன்றைய காலக்கட்டத்தில் ஜனநாயகத்தில் பற்றாக்குறை என்னும் சூழல் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க