செய்திகள் :

"எழுத்தாளர்கள் எழுத முடியாதத உங்க ஓவியம் காட்டுதுனு சொன்னாங்க" -நெகிழும் ஓவியர் செல்வ செந்தில்குமார்

post image

'Hunger And Sacrifice' என்கிற தலைப்பில் ஓவியர் செல்வ செந்தில்குமாரின் ஓவியக்கண்காட்சி சென்னை லலித்கலா அகாதமியில் ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது. 

ஓவிய ஆளுமைகள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரையும் இந்தக்கண்காட்சி கவர்ந்திருக்கிறது. 

ஓவியக்கண்காட்சியை காணும் பார்வையாளர்கள்
ஓவியக்கண்காட்சியை காணும் பார்வையாளர்கள்

மனித உணர்வுகளை, அதன் சிக்கல்களைப் படிம நிலைகளாகத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்திருக்கும் ஓவியர் செல்வ செந்தில்குமார் இதுபற்றி பகிர்ந்து கொள்ளும் போது, “எனக்கு சொந்த ஊர் கொடைக்கானல். ஆனா பிறந்து வளர்ந்தெல்லாம் சென்னைதான். பள்ளிப்படிப்பு முடிச்சிட்டு பி.எஸ்.சி மேக்ஸ் தான் படிச்சேன். அதுக்கப்புறம் கலைல ஆர்வம் வந்து மைசூர் ஓவியக்கல்லூரில சேர்ந்தேன்.

இப்போ இந்த ஓவியத்துறையில பதினெட்டு வருசமா இருந்துட்டு வர்றேன். இந்தக் கண்காட்சில காட்சிப்படுத்துட்டுக்கிற ஓவியங்கள் எல்லாமே கடைசி மூணு வருசத்துல வரையப்பட்ட ஓவியங்கள்தான். இந்த நடைமுறை வாழ்க்கைங்கிறது ரொம்ப ஸ்மார்ட்டா ஈஸியா இருக்குன்னு நம்ம நினைக்கிறோம். ஆனா அது அழுத்தமாக மாறி பேரழுத்தமானதாகத்தான் மாறிட்டே இருக்கு.

அந்தப் பதற்றநிலையைத் தான் என்னுடைய ஓவியங்கள் பதிவு பண்ணுது. இந்த ஓவியங்களில் இருக்கிற ஆடு, கழுதை, குதிரை, பறவைகள் எல்லாமே மனிதர்களோட உணர்வுகளை மெட்டோபராகச் சொல்றது. இந்தக் கண்காட்சியில 140 ஓவியங்களை வச்சிருக்கோம்.

ஓவியர் செல்வ செந்தில்குமார்
ஓவியர் செல்வ செந்தில்குமார்

ஒரு கலைஞன் எந்த அளவுக்கு நேர்மையா இருக்கிறனோ அந்த அளவுக்கு அது மற்றவங்களையும் போய் சேரும். இந்தக் காலகட்டத்தில் நம்ம நிம்மதியைத் தேடுறோம். அதான் நம்மளால அப்படி இருக்க முடியிறதில்லை. யாரோடையும் நம்ம நேரடியான தொடர்பில் இருக்கிறதில்லை.

இந்த ஓவியங்களில் காட்டப்பட்டிருக்கிற கலரிங் ஒவ்வொரு காலத்தையும் குறிக்கிற மாதிரி வரைஞ்சிருக்கேன். இந்த ஓவியங்களை எல்லாமே மரூஉ தான். இந்தக் கண்காட்சியைப் பார்க்க வந்த நிறைய பேர் இன்றைய சூழலைத்தான் காட்டியிருக்கீங்க. எழுத்தாளர்களால் எழுத முடியாததைக் கூட உங்க ஓவியத்துல காட்டியிருக்கீங்கன்னு சொல்றாங்க ரொம்ப சந்தோசமாக இருக்கு“  என்று நெகிழ்கிறார் ஓவியர். 

கோயமுத்தூரில் இருந்து இந்த ஓவியங்களைப் பார்க்க வந்த ஓவியர் விக்னேஷ்வரன் இந்தக் கண்காட்சி பற்றி நம்மிடம் பேசும்போது, “இந்த ஓவியங்கள் எல்லாமே அவருக்குச் சமூகத்தின் மீதுள்ள பார்வையைத்தான் வெளிப்படுத்துவதாக இருக்கு. மனிதர்கள், விலங்குகள் எல்லாவற்றையும் குறீயீடாக வச்சி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கு.

ஓவியர் விக்னேஷ்வரன்

பெரும்பாலான ஓவியங்கள் எனக்கு ஒரு படம் பார்க்கிறத மாதிரியும், கதை சொல்றத மாதிரியும் தான் தெரியுது. எதையுமே மறைமுகமாகக் காட்டாமன உணர்வுகளை நேரடியா வெளிப்படுத்துறார். சமூகத்தில் நையப்புடஞ்ச விசயங்களை வரைஞ்சிருக்கிறார்.

நவீன பாணி ஓவியங்கள்ன்னு இவருடைய ஓவியங்களை முதல் நாளிலிருந்தே நிறைய பேர் வாங்கிட்டு போறாங்க. அதைப்பாக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு. இந்தக் கண்காட்சி பார்க்கிறதுக்காகத்தான் கோயம்புத்தூர்ல இருந்து வந்தேன்" என மனம் நிறைகிறார் விக்னேஷ்வரன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

World Photography Day: கடல், நிலம், கிராமம், யானைகள் - வான் உயரத்திலிருந்து | TOP DOWN SHOTS

உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உலக புகைப்பட தினம்உல... மேலும் பார்க்க

நீலகிரி சுதந்திர தின விழா: காவல்துறை பேக் பைப்பர் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி! | Photo Album

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு காவல்துறை பேக் பைப்பர் இசைக்குழு நடத்திய இசை நிகழ்ச்சி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு காவல்துறை... மேலும் பார்க்க

மகாபலிபுரம் கடற்கரை: பிரமாண்ட கோயில்; வியக்க வைக்கும் சிற்பக் கலை Drone Shots | Photo Alubum

மகாபலிபுரம் கடற்கரை கோயில்மகாபலிபுரம் கடற்கரை கோயில்மகாபலிபுரம் கடற்கரை கோயில்மகாபலிபுரம் கடற்கரை கோயில்மகாபலிபுரம் கடற்கரை கோயில்மகாபலிபுரம் கடற்கரை கோயில்மகாபலிபுரம் கடற்கரை கோயில்மகாபலிபுரம் கடற்கர... மேலும் பார்க்க

World Record: '17 நாள்கள், 170 மணி நேரம்' - பரத நாட்டியத்தில் புதிய சாதனை படைத்த கல்லூரி மாணவி

7 நாள்கள், 170 மணிநேரம் பரதநாட்டியம் ஆடி, கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்த செயிண்ட் அலோஷியஸ் கல்லூரியின் 20 வயது மாணவி ரெமோனா எவெட் பெரெய்ரா, உலக சாதனை படைத்துள்ளார்.Remona Evette Pereira13 ஆண்ட... மேலும் பார்க்க

``அப்பனுக்கு பனை ஓலையில பைத்தியம்ன்னு என் மகன் சொல்லிட்டு திரியிவான்'' - ஓலை கலைஞர் பால்பாண்டி

பனை ஓலையில் எழுதலாம்.... பனை ஓலையாலேயே எழுதலாமா? - ரெக்கார்ட் அடித்த தூத்துக்குடி பனை ஓலை கலைஞர்.குறுக்குப்பிடி குணப்படுத்துவது, சுளுக்கு தடவுவது, விஷக்கடிக்கு வைத்தியம் பார்ப்பது போன்றவற்றில் கிடைக்க... மேலும் பார்க்க