ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அ...
World Record: '17 நாள்கள், 170 மணி நேரம்' - பரத நாட்டியத்தில் புதிய சாதனை படைத்த கல்லூரி மாணவி
7 நாள்கள், 170 மணிநேரம் பரதநாட்டியம் ஆடி, கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்த செயிண்ட் அலோஷியஸ் கல்லூரியின் 20 வயது மாணவி ரெமோனா எவெட் பெரெய்ரா, உலக சாதனை படைத்துள்ளார்.

13 ஆண்டுகளாக தனது குரு ஸ்ரீவித்யா முரளிதரிடம் முறையாக பரதநாட்டியம் பயின்ற இவர், கடந்த ஜூலை 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, 3 மணி நேரத்திற்கு ஒருமுறை, 15 நிமிட இடைவேளை எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடனமாடி, கோல்டன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
விநாயகர் பாடலில் தொடங்கி துர்கை அம்மன் பாடல் வரை காவிய முகபாவனைகளுடன் ரெமோனா பரதநாட்டியம் ஆடியுள்ளார்.
கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ரெமோனா, ஜெபமாலை அணிந்துகொண்டு கணபதி பாடலில் தொடங்கிப் பல பாடல்களுக்கு முகபாவங்களுடன் நடனமாடியுள்ளார்.
மங்களூரின் பிஷப் பீட்டர் பால் இந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தனது 170 மணிநேர சாதனை ஒரு நடன நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், தனக்கே ஒரு தவநிலைபோன்ற அனுபவமாக இருந்ததாகவும் இந்திய இளைஞர்களுக்குப் பரதநாட்டியம் ஒரு முன்னேற்றத்தின் அடையாளமாக அமையக்கூடும் எனவும் ரெமோனா கூறியுள்ளார்.
கல்லூரி இறுதி ஆண்டு படிப்புடன் பல மாதங்கள் தினமும் சுமார் 6 மணி நேரம் நடனப்பயிற்சி செய்து, 170 மணிநேரம் தொடர்ந்து தனது சலங்கை ஒலியை ஒலிக்கச் செய்தார்.
பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால்புரஸ்கார் (2022) விருது பெற்றிருக்கிறார். இந்தியா சாதனைப் புத்தகத்தில் முன்பே இடம் பெற்றிருக்கிறார் ரெமோனா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...