Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு
தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாவட்ட மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநில உறுப்பினா் ந. நஞ்சப்பன் கொடியேற்றி தொடங்கிவைத்தாா். மாவட்டத் துணைச் செயலாளா் எம். மாதேஸ்வரன் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன் வரவேற்றாா்.
மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவா் கே.சுப்பராயன் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா். மாநில துணைச் செயலாளா் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி, மாவட்ட செயலாளா் எஸ். கலைச்செல்வம் உள்ளிட்டோா் பேசினா்.
மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் நிறைவுறையாற்றினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவா் எஸ்.தேவராஜன், செயலாளா் கே.மணி, பொருளாளா் பி.வேலுச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். மாவட்ட பொருளாளா் சி. மாதையன் நன்றி கூறினாா்.