செய்திகள் :

உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ்கர் சிங் விளக்கம்

post image

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரின் சிவாலிக் மலைகளில் உள்ள பில்வா பர்வத்தின் உச்சியில் மான்சா தேவி கோயில் அமைந்திருக்கிறது. சுமார் 1.5 கிமீ மலை மீது ஏற மலைப்பாதை, படிகட்டுகள், ரோப்வே வழியாகக் கோயிலை அடையமுடியும். இந்த நிலையில், இன்று காலை மான்சா தேவி கோயிலுக்கு படிகட்டு வழியே சென்ற பக்தர்கள் மத்தியில், காலை 9 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 55 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்புப் பணியை தொடங்கினர். இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``நெரிசல் ஏற்படுவதற்கு முன்பே மன்சா தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கூட்டத்தில் இருந்த சிலர் மீது மின்சாரம் தாக்கியதாக வதந்தி கிளம்பியதால், பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு நெரிசல் உண்டானதாகத் தெரிகிறது." என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ``ஹரித்துவாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த துயரச் செய்தியால் மிகவும் வருத்தமடைந்தேன். எஸ்.டி.ஆர்.எஃப், உள்ளூர் காவல்துறை மற்றும் பிற மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. உள்ளூர் நிர்வாகத்துடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். அனைத்து பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் மாதா மான்சாவிடம் பிரார்த்தனை செய்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

முதுகுளத்தூர்: டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி; ரேஷன் பொருள்கள் வாங்கி வரும் போது நடந்த சோகம்..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கூவர் கூட்டம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் நியாயவிலை கடை இல்லாத நிலையில் அருகில் உள்ள சின்ன பொதிகுளம் கிராமத... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி: திடீரெனப் பரவிய காட்டுத்தீ; தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் திடீரென காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை புலிகள் சரணாலயத்த... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பள்ளிக்கட்டிடம் இடிந்து 4 குழந்தைகள் பலி; இடிபாடுகளில் 17 பேர் காயம்.. என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டத்தில் உள்ள மனோஹர் பிப்லோதி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த அரசு பள்ளிக்கட்டிடம் இன்று காலையில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது 40 மாணவர்கள், குழந்... மேலும் பார்க்க

Russia விமான விபத்து: ஒட்டுமொத்தமாக 49 பேர் உயிரிழப்பு - விபத்துக்கான காரணம் என்ன?

கடந்த திங்கள்கிழமை ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 49 பயணிகளுடன் சென்ற விமானம் சீன எல்லை அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலிருந்த அனைவருமே உயிரிழந்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் ரஷ்ய ... மேலும் பார்க்க

நீலகிரி: 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்; விபரீதத்தில் முடிந்த வழுக்கு மரம் போட்டி!

நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் அமைந்திருக்கிறது மேல் பாரதி நகர். ஊரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக பாரம்பர்ய சாகச போட்டிகளில் ஒன்றான வழ... மேலும் பார்க்க

கூடலூர்: யானை மிதித்து உயிரிழந்த தொழிலாளி; யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் பலியாகும் அப்பாவிகள்..

யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் மேலும் ஒரு உயிர் பறிபோயிருக்கும் துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டே... மேலும் பார்க்க