செய்திகள் :

Russia விமான விபத்து: ஒட்டுமொத்தமாக 49 பேர் உயிரிழப்பு - விபத்துக்கான காரணம் என்ன?

post image

கடந்த திங்கள்கிழமை ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 49 பயணிகளுடன் சென்ற விமானம் சீன எல்லை அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலிருந்த அனைவருமே உயிரிழந்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வானில் பறந்துகொண்டிருந்தபோது விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் விமானத்துடனான தொடர்பை இழந்துள்ளனர். சில நிமிடங்களில் மீட்பு பணியினர் காட்டில் எரிந்து சிதிலமடைந்துகொண்டிருந்த விமானத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

Russia விமான விபத்து

அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் An-24 விமானம்
அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் An-24 விமானம்

ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் உள்ள டிண்டா நகரில் இந்த விபத்து நடந்திருக்கிறது. மோசமான வானிலையால் தரையைப் பார்க்க முடியாத சூழலில் விமானி தரையிறங்க முயன்றதுதான் விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

உள்ளூர் அமைச்சகம் கூறுவதன்படி, சைபீரியாவைத் தளமாகக் கொண்ட அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் An-24 விமானம், டிண்டா விமான நிலையத்தில் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயற்சித்தபோது ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் சோவியத் காலத்தைச் சேர்ந்த 50 ஆண்டுகள் பழமையான ஒன்று எனக் கூறப்படுகிறது. அதன் வால் பகுதியிலிருந்த எண்ணைக் கொண்டு 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

அடர்ந்த காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் ஹெலிகாப்டரிலிருந்து படம்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

அமுர் பிராந்திய கவர்னர் வாசிலி ஓர்லோவ் கூறியதன்படி, விபத்துக்குள்ளான விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகளும் 6 விமான குழுவினரும் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமுர் பிராந்தியம் மாஸ்கோவிலிருந்து 6,000 கி.மீ தொலைவில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ராபின்சன் ஆர்66 என்ற ஹெலிகாப்டரில் மூன்று பேர் பதிவு செய்யாத பயணத்தை மேற்கொண்டபோது இந்தப் பிராந்தியத்தில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி: திடீரெனப் பரவிய காட்டுத்தீ; தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் திடீரென காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை புலிகள் சரணாலயத்த... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பள்ளிக்கட்டிடம் இடிந்து 4 குழந்தைகள் பலி; இடிபாடுகளில் 17 பேர் காயம்.. என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டத்தில் உள்ள மனோஹர் பிப்லோதி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த அரசு பள்ளிக்கட்டிடம் இன்று காலையில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது 40 மாணவர்கள், குழந்... மேலும் பார்க்க

நீலகிரி: 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்; விபரீதத்தில் முடிந்த வழுக்கு மரம் போட்டி!

நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் அமைந்திருக்கிறது மேல் பாரதி நகர். ஊரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக பாரம்பர்ய சாகச போட்டிகளில் ஒன்றான வழ... மேலும் பார்க்க

கூடலூர்: யானை மிதித்து உயிரிழந்த தொழிலாளி; யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் பலியாகும் அப்பாவிகள்..

யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் மேலும் ஒரு உயிர் பறிபோயிருக்கும் துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டே... மேலும் பார்க்க

கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

`Final Destination Bloodlines படத்தில் ஒரு காட்சியில், கற்பனைக் கூட செய்ய முடியாதளவு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் ஒருவர் கொடூரமாக உயிரிழப்பார். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. நியூயார்க்கின்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி... 3 பேர் படுகாயம் - சிவகாசியில் தொடரும் சோகம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 90% பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவு... மேலும் பார்க்க