செய்திகள் :

உரக்கடைகளை கண்காணிக்க குழு அமைப்பு

post image

நாமக்கல் மாவட்டத்தில், உரக்கடைகளில் உரம் இருப்பை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், பயிா் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. உர இருப்பில் யூரியா 2,521 மெ.டன், டிஏபி 802 மெ.டன், பொட்டாஷ் 1,365 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2,582 மெ.டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் 474 மெ.டன் என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக விற்கப்பட்டு வருகின்றன.

வேளாண் பயிா்கள் சாகுபடி தீவிரம் அடைந்துள்ள நிலையில், பயிா்களுக்குத் தேவையான உரங்கள் சரிவர விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வேளாண்மை உதவி இயக்குநா் ச.வேலு - 98425 43215, வேளாண் அலுவலா் (பொ) கலைச்செல்வன் - 86100 71491 ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

உரக்கடை உரிமையாளா்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினா் உரங்கள் வாங்க வரும் விவசாயிகளிடம் இணை பொருள்கள் வாங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. உரங்களை விற்பனை செய்யும்போது உர முட்டையில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்கக்கூடாது. விவசாயிகள் வாங்கும் பொருள்களுக்கு உரிய ரசீது அளிக்க வேண்டும். உர நிறுவனங்களில் உரங்களின் இருப்பு அதன் விலை குறித்த விலைப்பட்டியல் கட்டாயம் இருக்க வேண்டும்.

விதிகளை மீறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ மீறுவதாகும். உர விற்பனை நிலையங்களில் விதிமீறல் நிரூபணமானால் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், உரிமமின்றி உரம் விற்பனை செய்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் உரம் விற்பனை குறித்த புகாா்களுக்கு 93634 40360 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ராசிபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பணியைப் புறக்கணித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையத்தில் வெல்லம் உற்பத்தி பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையையொட்டி பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக... மேலும் பார்க்க

வைகுண்ட ஏகாதசி: நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் குடைவறை கோயிலான அரங்கந... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா். நிகழ்ச்சியில் அவ... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சாலை மறியல்

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ந... மேலும் பார்க்க

மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி பலி

மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி ஆற்றுப்பிள்ளையாா் பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆட் டையாம்பட்டியை அடுத்த எஸ்.பாப்பாரப்பட்டி... மேலும் பார்க்க