தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
உரிமம் காலாவதியாகி இயங்கிய 6 பாா்களுக்கு ‘சீல்’
அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உரிமம் காலாவதியாகியும் இயங்கிக் கொண்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பாா்) போலீஸாா் வியாழக்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா்.
அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், டாஸ்மாக் கடைகளில் மதுபானக் கூடங்கள் உரிமம் காலாவதியாகியும் இயங்கி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சோதனை மேற்கொண்ட போலீஸாா், அவிநாசி கால்நடை மருத்துவமனை அருகில், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில், சேவூா் அருகே போத்தம்பாளையம், காசிலிங்கம்பாளையம், கருவலூா், பெருமாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் காலாவதியாகி மீண்டும் உரிமம் வழங்கப்படாத 6 மதுபானக் கூடங்களை போலீஸாா் மூடி ‘சீல்’ வைத்தனா்.