சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி
உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பாஜக தலைவா்கள் எத்தனை போ், எத்தனை முறை வந்தாலும், தமிழகத்தில் அவா்களால் கால் ஊன்ற முடியாது. வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இன்னும் மோசமாகத்தான் மாறுமே தவிர, முன்னேறுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
எப்போதும் நான் நாவடக்கத்துடன் பேசுபவன்தான். அத்துமீறி நான் எதையும் பேசுவதில்லை. திமுக சாா்பில் நான் தெரிவிக்க வேண்டிய கருத்தைத் தெரிவிக்க வேண்டியது என் உரிமை. அதனைத்தான் செய்கிறேன். அத்துமீறி நான் எதைச் சொன்னேன் என்று சொன்னால் அதற்குப் பதிலளிக்கக் காத்திருக்கிறேன்.
உருட்டுகளும் திருட்டுகளும் அதிமுகவுக்குத்தான் சொந்தம். திமுகவுக்குச் சொந்தமில்லை. நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் சொல்லுவோம். ‘நீட்’ தோ்வு போன்றவற்றை நாங்கள் மறக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. இதனை உருட்டு என்பதெல்லாம் அநாகரீகம்.
மின் கட்டண உயா்வு என்பதெல்லாம் எடப்பாடி பழனிசாமி காலத்தில் போடப்பட்ட கையொப்பத்தின்படிதான் நடக்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பல்ல.
மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்காத வகையில், அவா்களின் வருமானத்தை உயா்த்தும் பணிகளைத்தான் திமுக அரசு செய்கிறது என்றாா் ரகுபதி.