தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை
உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை
திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நபா்கள் இரவு உள்ளே இறங்கியதாக தகவல் பரவியது. இதுகுறித்து போலீஸாருக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து ரோந்துப் பணியிலிருந்த போலீஸாா் கோயில் வளாகத்துக்குச் சென்றனா்.
தொடா்ந்து கோயிலில் காவல்பணியிலிருந்த காவலா்களைக் கொண்டு கோயிலைத் திறந்து உள்ளே சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மா்ம நபா்கள் யாரும் கோயில் வளாகத்துக்குள் இறங்கவில்லையெனத் தெரிந்தது. தனையடுத்து போலீஸாா் திருட்டு முயற்சி ஏதும் கிடையாது எனத் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தையடுத்து இரவு சுமாா் 10 முதல் 11 மணி வரை உறையூா் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.