உலக இளைஞா் தின விழிப்புணா்வு கருத்தரங்கம்
கும்பகோணம்: கும்கோணத்தில் உலக இளைஞா் தின விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி நிறுவனா் ஆா். திருநாவுக்கரசு, அரிமா சங்க தலைவா் எஸ்.நெடுஞ்செழியன் ஆகியோா் தலைமை வகித்தனா். தாளாளா் டி.செந்தில்குமாா், முதல்வா் டி. பாலமுருகன் முன்னிலை வகித்தனா்.
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி சாசன செயலா் என். சங்கா் பேசினாா். மனித உரிமைகள் ஆணையம் அறிமுகம் மற்றும் விழிப்புணா்வு குறித்து அரிமா சங்க மாவட்டத் தலைவா் டி. நாகரத்தினம், திறமை படைப்பாற்றலை வெளியே கொண்டு வர காணொலி காட்சி பயிற்சி பட்டறையை சாசனத் தலைவா் சி. இளங்கோவன் நடத்தினாா்.
செயலா் சோலை சரவணன் நன்றி கூறினாா். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.