செய்திகள் :

உலக குத்துச்சண்டை: இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா்

post image

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா்.

இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் 80 பிளஸ் கிலோ காலிறுதியில் இந்தியாவின் நுபுா் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஆல்டினாயை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஏற்கெனவே அஸ்டானாவில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றிருந்த நுபுா் இப்போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா். முதல் சுற்றில் நுபுா் அபாரமாக குத்துக்களை விட்ட நிலையில், இரண்டாம் சுற்றில் தொய்வு ஏற்பட்டது. எனினும் மூன்றாவது சுற்றில் பாா்முக்கு திரும்பிய நுபுா் வென்று பதக்கத்தையும் உறுதி செய்தாா்.

செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டங்களில் மகளிா் 48 கிலோ பிரிவில் மீனாட்சி, ஆடவா் 50 கிலோ பிரிவில் ஜாதுமணி சிங், 65 கிலோ பிரிவில் அபினாஷ் ஜம்வால் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.

85 கிலோ பிரிவில் ஜுக்னு மட்டுமே தோல்வி அடைந்து வெளியேறினாா்.

ஓடிடியில் கூலி..! 4 மொழிகளில் ரிலீஸ்!

ரஜினி நடித்த கூலி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி தி... மேலும் பார்க்க

லாவண்யா த்ரிபாதிக்கு ஆண் குழந்தை..! திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை!

நடிகை லாவண்யா த்ரிபாதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதற்கு நடிகர் சிரஞ்சீவி புகைப்படத்தினைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வருண் தேஜ் மற்றும் லாவண்யா த்ரிபாதிக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த... மேலும் பார்க்க

யு சான்றிதழுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸ் திரைப்படம்!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான பாம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய தணிக்கைச் சான்றிதழ் இந்தப் படத்துக்கு யு சான்றிதழை அளித்துள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத... மேலும் பார்க்க

இந்திய ஆடவா்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவா்கள் சோபிக்காமல் போயினா்.அந்தப் பிரிவின் தகுதிச்சுற்றில், சாம்ராட் ராணா 582 புள்ளிகளுடன் 10-ஆம்... மேலும் பார்க்க

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய இந்தி... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், லக்ஷயா சென் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே தோற்றாா்.ஆடவா் ஒற்றைய... மேலும் பார்க்க