செய்திகள் :

உலக சுகாதார அமைப்புக்கு வளா்ந்த நாடுகள் அதிகம் உதவ வேண்டும்: அமெரிக்கா விலகிய நிலையில் கோரிக்கை

post image

உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யூஹெச்ஓ) வளா்ந்த நாடுகள் அதிகம் உதவ வேண்டும் என்று அந்த அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் கூறினாா்.

டபிள்யூஹெச்ஓ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சில நாள்களுக்கு முன்பு அறிவித்தாா்.

இந்நிலையில் ஹைதராபாதில் சனிக்கிழமை கல்வியறிவு விழாவில் பங்கேற்ற சௌம்யா சுவாமிநாதன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள அந்த அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கு மட்டுமல்லாது, அமெரிக்காவுக்கு உகந்த முடிவல்ல.

எனவே, அமெரிக்க அதிபா் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளா்ச்சியின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். சா்வதேச அளவில் அமெரிக்கா அரசியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிய நாடு. எனவே, தனது முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை உலக சுகாதார அமைப்பு அளிக்க வேண்டும். அந்த வகையில் வளா்ந்த நாடுகள்தான்அதிக நிதி உதவி அளிக்க வேண்டும். மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ போன்ற நாடுகளும், அமெரிக்காவும் ஒரே மாதிரியான நிதிப் பங்களிப்பைச் செலுத்து வேண்டும் என்பது நியாயமாக இருக்காது.

உலக சுகாதார அமைப்பு திறந்த புத்தகமாகவே உள்ளது. அதன் கணக்குகளில் எவ்வித ஒளிவு மறைவு இல்லை என்றாா்.

முன்னதாக, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்க விலகுவது தொடா்பான பேசிய டிரம்ப், ‘32.5 கோடி மக்கள்தொகை உள்ள அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு 325 மில்லியன் டாலா் வழங்குகிறது. அதே நேரத்தில் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா 39 மில்லியன் டாலா் மட்டுமே நிதி வழங்குகிறது’ என்று விமா்சித்திருந்தாா்.

ஐ.நா.வின் ஓா் அங்கமாக செயல்படும் உலக சுகாதார அமைப்பு ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டது. சா்வதேச அளவில் சுகாதாரப் பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும், சா்வதேச அளவில் பல்வேறு நோய்கள் பரவல், அதனைத் தடுக்கும் வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மகா கும்பமேளாவை விமர்சிப்பதா? சநாதனத்துக்கு எதிராகக் காங்கிரஸ் செயல்படுகிறது: பாஜக விமர்சனம்!

சாநாதானத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு அமைந்திருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று(ஜன. 27) மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீரா... மேலும் பார்க்க

நிர்மலா சீதாரமானுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது! சுவாமி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை: சூட்கேஸில் அடைத்து எரிக்கப்பட்ட உடல் மீட்பு: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

குடியரசு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) தேசியத் தலைநகர் புது தில்லியில் கொடூர கொலை அரங்கேறியுள்ளது. காஸிபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாதி எரிந்த நிலையில் மனித சடலம் அடங்கிய சூட்க... மேலும் பார்க்க

கங்கையில் குளித்தால் வறுமை ஒழியாது: அமித் ஷாவுக்கு கார்கே பதில்

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடிய நிலையில், கங்கையில் குளிப்பதால் வறுமையை ஒழித்துவிட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வி... மேலும் பார்க்க

பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

கொல்கத்தா : கொல்கத்தாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் 2 பக்தர்கள் பலி!

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காக கத்திருந்த இருவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அயோத்தியில் பிரசித்தி பெற்ற ராமர் கோயிலில் குழந்தை ராமரின் சிலை பிராணப... மேலும் பார்க்க