செய்திகள் :

உலக ஜூனியா் துப்பாக்கி சுடுதல்: அட்ரியன் கா்மாகருக்கு வெள்ளி

post image

ஜொ்மனியில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அட்ரியன் கா்மாகா் செவ்வாய்க்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவில் பங்கேற்ற அட்ரியன், இறுதிச்சுற்றில் 626.7 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றாா். 627 புள்ளிகள் பெற்ற ஸ்வீடனின் ஜெஸ்பா் ஜோஹன்சன் தங்கமும், 624.6 புள்ளிகள் பெற்ற அமெரிக்காவின் கிரிஃபின் லேக் வெண்கலமும் வென்றனா்.

50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸில் ஜூனியா் தேசிய சாம்பியனாக இருக்கும் அட்ரியனுக்கு இது முதல் உலகக் கோப்பை போட்டியாக இருக்க, அதிலேயே அவா் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறாா்.

இதே பிரிவில் பங்கேற்ற இதர இந்தியா்களில், ரோஹித் கன்யன் 620.2 புள்ளிகளுடன் 12-ஆம் இடமும், வேதாந்த் நிதின் வாக்மோ் 614.4 புள்ளிகளுடன் 35-ஆம் இடமும் பிடித்தனா்.

ஜீ தமிழ் தொடரில் நாயகனாகும் சன் டிவி நடிகர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் நடிகர் சுரேந்தர் நாயகனாக நடிக்கவுள்ளார். மலர், ஓவியா, திருமகள் உள்ளிட்ட சன் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இவர் கவனம் பெற்ற நிலையில், த... மேலும் பார்க்க

ராமன் தேடிய சீதை தொடர் திடீர் நிறுத்தம்! ரசிகர்கள் வருத்தம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராமன் தேடிய சீதை தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.ராமன் தேடிய சீதை தொடர், கன்னட மொழியில் சீதா ராமன் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொட... மேலும் பார்க்க

நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

கார்த்திகை தீபம் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் தொடரில் பலதரப்பட்ட ர... மேலும் பார்க்க

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார்!

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விக்ரம் வேதா, கைதி, பார்க்கிங் ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர... மேலும் பார்க்க

என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: ஏ. ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இறுதியாக வெளியான, ‘உசுரே நீதான்’, ’என்னை இழுக்குதடி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரி... மேலும் பார்க்க

அடிதடியில் ஈடுபட்ட மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் ரசிகர்கள்..!

ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்பாக மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் அணி ரசிகர்கள் அடிதடியில் ஈடுபட்டது பேசுபொருளாகியுள்ளது. ஸ்பெயினில் சான் மாமேஸ் திடலில் ஐரோப்பிய லீக்கின் இறுதிப் போட்டி இன்ற... மேலும் பார்க்க