செய்திகள் :

உலக டேபிள் டென்னிஸ்: யஷஸ்வினி/தியா இணை முன்னேற்றம்

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் யஷஸ்வினி கோா்படே/தியா சித்தலே கூட்டணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

மகளிா் இரட்டையா் 2-ஆவது சுற்றில் யஷஸ்வினி/தியா கூட்டணி 6-11, 11-6, 11-6, 11-9 என்ற கணக்கில் சிங்கப்பூரின் ஜெங் ஜியான்/சொ் லின் கியான் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்தது.

எனினும் மற்றொரு இந்திய ஜோடியான சுதிா்தா முகா்ஜி/அய்ஹிகா முகா்ஜி 1-11, 11-13, 7-11 என்ற நோ் கேம்களில், ஜொ்மனியின் ஆனெட் கௌஃப்மன்/ஜியாவ்னா ஷான் இணையிடம் 23 நிமிஷங்களில் தோற்றனா்.

கலப்பு இரட்டையரில் தியா சித்தலே/மனுஷ் ஷா ஜோடி 8-11, 9-11, 2-11 என்ற நோ் கேம்களில் தென் கொரியாவின் ஓ ஜுன்சங்/கிம் நயோங் இணையிடம் 2-ஆவது சுற்றில் தோல்வியைத் தழுவியது.

ஆடவா் இரட்டையரிலும் மானவ் தக்கா்/மனுஷ் ஷா இணை 5-11, 9-11, 11-8, 5-11 என, ஜொ்மனியின் பெனெடிக்ட் டுடா/டாங் கியு ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.

ஆடவா் ஒற்றையா் பிரிவிலும் மனுஷ் ஷா தனது 2-ஆவது சுற்றில் 5-11, 6-11, 6-11, 9-11 என்ற கேம்களில் பிரான்ஸின் ஃபெலிக்ஸ் லெப்ரனிடம் தோல்வி கண்டாா். மானவ் தக்கரும் 11-13, 3-11, 11-9, 6-11, 11-9, 3-11 என்ற கேம்களில், உலகின் 4-ஆம் நிலை வீரரான ஜப்பானின் ஹரிமோடோ டோமோகாஸுவிடம் வெற்றியை இழந்தாா்.

மகளிா் ஒற்றையரில் மனிகா பத்ரா 8-11, 7-11, 5-11, 8-11 என்ற கேம்களில் தென் கொரியாவின் பாா்க் கஹியோனிடம் தோல்வி கண்டாா். அதேபோல் தியா சித்தலேவும் 3-7, 7-11, 6-11, 11-6, 5-11 என்ற கணக்கில் சீன தைபேவின் செங் ஐ சிங்கிடம் வீழ்ந்தாா்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார்!

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விக்ரம் வேதா, கைதி, பார்க்கிங் ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர... மேலும் பார்க்க

என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: ஏ. ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இறுதியாக வெளியான, ‘உசுரே நீதான்’, ’என்னை இழுக்குதடி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரி... மேலும் பார்க்க

அடிதடியில் ஈடுபட்ட மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் ரசிகர்கள்..!

ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்பாக மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் அணி ரசிகர்கள் அடிதடியில் ஈடுபட்டது பேசுபொருளாகியுள்ளது. ஸ்பெயினில் சான் மாமேஸ் திடலில் ஐரோப்பிய லீக்கின் இறுதிப் போட்டி இன்ற... மேலும் பார்க்க

சாதனைப் படைத்த மகாநதி தொடர்! குவியும் வாழ்த்து!

மகாநதி தொடர் 600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி சாதனைப் படைத்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி ... மேலும் பார்க்க

மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு!

நடிகர் ரவி மோகன் மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி மனு அளித்துள்ளார். நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி இணை விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்த... மேலும் பார்க்க

மோகன்லால் பிறந்த நாளில் கண்ணப்பா புதிய போஸ்டர்!

நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கண்ணப்பா படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளனர். மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாகவே கருதப்படும் மோகன்லால் தன் 65-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிற... மேலும் பார்க்க