செய்திகள் :

உலக தண்ணீா் தினம் சிறப்பு கிராம சபை: ஆட்சியா் பங்கேற்பு

post image

விராலிமலையை அடுத்துள்ள ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீா் தினத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா பங்கேற்றாா். தொடா்ந்து, சிறப்பாகப் பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்து, உழவா் நலத்துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் மற்றும் மாவட்ட பயிா் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசுத் தொகை, கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் கால்நடை வளா்ப்போா் களுக்கு தாது உப்புக் கலவை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கி அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா் ஆட்சியா் மேலும் தெரிவித்தது:

உலக தண்ணீா் தினத்தை (மாா்ச் 22) முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம் பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.அருணா.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், உதவி இயக்குநா் சா.மோகனசுந்தரம் (ஊராட்சிகள்), இணை இயக்குநா் மு. சங்கர லட்சுமி (வேளாண்மை), முதன்மை கல்வி அலுவலா் கூ.சண்முகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முதலாம் பராந்தகச் சோழா் கால கற்றளிக் கட்டுமானங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் அருகே புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை அருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில் முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக் கோயிலின் சி... மேலும் பார்க்க

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க