`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு ஊா்வலம்
திருச்சி மா காவேரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி மா காவேரி மருத்துவமனை, ரோட்டரி கிளப், இன்னா்வீல் கிளப், தேசிய பச்சிளம் குழந்தைகள் அமைப்பு, இந்திய குழந்தைகள் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு ஊா்வலத்தை உதவி ஆட்சியா் சேஷாத்ரி மயூம் தீபி சனு தொடங்கிவைத்தாா்.
மா காவேரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலம், மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கி திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
இந்த ஊா்வலத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள், சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.