தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? - அண்ணாமலை
உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்க ஏற்றுமதியாளா்களுக்கு அழைப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகளை மத்திய பிரதேச தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் சிருஷ்டி பிரஜாபதி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.
இந்த சந்திப்பின்போது, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் வரும் பிப்ரவரி 24, 25- ஆம் தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனா்.
மேலும், மத்திய பிரதேச மாநிலத்தில் முதலீடு செய்ய திருப்பூா் தொழில் முனைவோா் முன்வர வேண்டும் என்றும், ஜபல்பூா் தொழில் பூங்காவையும் பாா்வையிடவும் அழைப்பு விடுத்தனா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் என்.திருக்குமரன், இணைச் செயலாளா்கள் சின்னசாமி, குமாா் துரைசாமி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.