செய்திகள் :

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

post image

பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சீர்திருத்தம் குறித்து இன்று (ஜூலை 6) உரையாற்றினார்.

அரசு முறைப் பயணமாக 5 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று பிரேசில் சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பங்கேற்றார். முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ரமபோசாவை சந்தித்துப் பேசினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 கூடுதல் உறுப்பு நாடுகளில் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் முதல் அமர்வில் அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளதாவது,

''பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தத்திற்கான அமர்வில் உரையாற்றினேன். இதில், உலக வளர்ச்சிக்கு முன்பு இருந்ததை விட தெற்குலகின் குரல் ஏன் மிகவும் முக்கியமானது என்பது குறித்த எனது பார்வைகளைப் பகிர்ந்துகொண்டேன். தெற்குலகின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்காக உலகளாவிய நிறுவனங்கள் போதுமான பிரதிநிதித்துவத்தை ஏன் தருகின்றன என்பது குறித்தும் உரையாற்றினேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ''அனைத்துமே செய்யறிவு (ஏஐ) ஆகிவிட்ட இக்காலகட்டத்தில், வாராவாரம் தொழில்நுட்பங்கள் மேம்பாடு அடைகின்றன. ஆனால், உலகளாவிய நிறுவனங்கள் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட மேம்பாடு அடையவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 20ஆம் நூற்றாண்டு தட்டச்சு இயந்திரத்தை 21ஆம் நூற்றாண்டு மென்பொருளில் இயக்க முடியவில்லை.

பிரிக்ஸ் என்பது காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட ஒரு அமைப்பு என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இப்போது, ​​ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு மற்றும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் போன்ற நிறுவனங்களில் சீர்திருத்தங்களுக்கு நாம் அதே உறுதியைக் காட்ட வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

PM Narendra modi Expressed views on why the voice of the Global South is more important BRICS Summit in Rio de Janeiro

ஜாதிய வலையில் பிகாா் அரசியல்!

இந்த ஆண்டின் நவம்பரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகாா் மாநிலம். எதிா்பாா்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தோ்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக்கி... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ராணுவ மருத்துவா்!

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா். பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவரு... மேலும் பார்க்க

தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்: தலைமை நீதிபதி கவாய்

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி பேசியவா் மீது தாக்குதல்! பாஜக கண்டனம்

மகாராஷ்டிரத்தில் ஹிந்தியில் பேசியவா் மீது உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்திய விடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்த... மேலும் பார்க்க