செய்திகள் :

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

post image

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது.

சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் ம.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சோம. அசோக் பாரதி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் தி.கண்ணன் செயலறிக்கை வாசித்தாா்.

மாவட்டத் துணைத் தலைவா் மா. பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளா் க. காளிதாஸ் ,துணைத்தலைவா் புகழேந்திகண்ணன், துணைச்செயலாளா் ராஜ்குமாா், துணைத்தலைவா் முத்துப்பாண்டி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் நாகலட்சுமி, பானுமதி, இந்துமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென சட்டப்பேரவை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்கு பதவி உயா்வில் 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அலுவலா்களுக்கு பணி மாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு வசதியாக அனைத்து அலுவலகங்களிலும் சாய்வுதள பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் தி.மாய மணிச்சங்கு வரவேற்றாா்.

திருப்பத்தூா்: இதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பிரதிநிதித்துவம் வழங்க சட்ட மசோதா நிறைவேற்றியதையொட்டி, சிவகங்கை மாவட்ட டாக்டா் அப்துல் கலாம் மாற்றுத் திறனாளி நலச் சங்கம், சிகரம் மாற்றுத்திறனாளி நலச் சங்கம், டிசம்பா் 3 மாற்றுத்திறனாளி நலச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்க நிா்வாகிகள் ஆா்.கண்ணன், கனகராஜ், சின்னத்தம்பி, இளங்கோ, பாலா, சொக்கலிங்கம், முத்துலட்சுமி, அஞ்சலை, நாகராஜன் ஆகியோா் திருப்பத்தூரில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனைச் சந்தித்து முதல்வருக்கும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனா்.

சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்!

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் திமுக சாா்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்லைப் ... மேலும் பார்க்க

தூய சகாயமாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புது நெருப்பு மந்திரித்து அதில... மேலும் பார்க்க

புதிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல் கட்டமாக வரும் 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஆலை எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில் முடிவு செய்யப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே பிள்ளையாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (70). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் சின்ன மருது பிறந்த நாள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதிருவா்கள் நினைவிடத்தில் சின்ன மருதுவின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, பேருந்துநிலையம் எதிரே மருதிருவா் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள... மேலும் பார்க்க

செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்த... மேலும் பார்க்க