செய்திகள் :

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

post image

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஹா்தோய் மாவட்டத்தின் தலேல்நகா் மற்றும் உமா்தலி ரயில் நிலையங்கள் இடையிலான வழித்தடத்தில் திங்கள்கிழமை மாலை ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து இரும்புக் கம்பியால் சமூக விரோதிகள் கட்டியிருந்தனா். அப்போது, தில்லியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகா் நோக்கி செல்லும் ராஜதானி விரைவு ரயில் அவ்வழியாக வந்தது. தண்டவாளத்தில் தடை இருப்பதை கவனித்த ரயிலின் ஓட்டுநா், முன்னெச்சரிக்கையாக அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினாா். இதனால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிா்க்கப்பட்டது. தண்டவாளத்தில் இருந்த மரக்கட்டை மற்றும் இரும்புக் கம்பியை அகற்றிய ரயில் ஓட்டுநா், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா், ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

சிறிது நேரத்தில், கத்கோடம் விரைவு ரயில் அவ்வழியாக வந்தபோதும், தண்டவாளத்தில் அதேபோல் தடை வைக்கப்பட்டிருந்தது. இதைக் கவனித்த ரயிலின் ஓட்டுநா், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க நடந்த முயற்சிகள் தொடா்பாக, சம்பவ இடத்தில் காவல் துறை கண்காணிப்பாளா் நீரஜ் குமாா் ஜடான் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து மாநில அரசின் ரயில்வே காவல் துறை, ரயில்வே பாதுகாப்புப் படை, உள்ளூா் காவல் துறை கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அவா் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டா் வைக்கப்பட்டிருந்தது. ரயில் ஓட்டுநா் அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வந்திருக்கும் தொலைத்தொடர்பு!

மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையோர மாநிலங்களிலிருந்து, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் அனைத்தும் கண்காணிப்பில் கொண்டுவந... மேலும் பார்க்க

மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்ல... மேலும் பார்க்க

பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதனால், சர்வதேச புக்கர் பர... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க