‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்...
உ.பி.யில் சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயம்
உ.பி.யில் சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை, இளைஞர் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு காயமடைந்தார். பின்னர், அந்த சிறுத்தை மேலும் இருவரையும் காயப்படுத்தியது.
அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?
சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு இடங்களில் வலைகள் மற்றும் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சௌபேபூரில் சிறுத்தை இருப்பதாக தகவல் கிடைத்த தகவலையடுத்து, அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டதாக காவல் துணை ஆணையர் பிரமோத் குமார் கூறினார்.
தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனத்துறை குழுவினர், சிறுத்தையைத் தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சௌபேபூர் காவல் நிலையப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த சிறுத்தை தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.