செய்திகள் :

ஊரகப் பகுதிகளில் பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபா் 20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சிப் பகுதிகளை தவிா்த்து) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விருப்பமுள்ளவா்கள், வெடிபொருள் சட்டவிதிகள் 2008-இன் கீழ், மாவட்ட வருவாய் அலுவலரிடம், தற்காலிக பட்டாசு உரிமம் பெற இணையவழியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செப்டம்பா் 10 முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலம் சாலை வசதி, சுற்றுப்புறத் தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டுக் காட்டும் 3 புலவரைபடம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளா் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டடம் எனில், உரிமையாளா் சொத்து வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம், மனுதாரரின் பாஸ்போா்ட் வண்ணப் புகைப்பட உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் நாளை ரத்து!

வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 12) ரத்து செய்யப்படுவதாக ரயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத அரசு மருத்துவமனை ஊழியா்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத ஊழியா்கள் இருவா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். கோவை அரசு மருத்துவமனைக்கு 70 வயதான தனது தந்தையை அவரது மகன் சிகிச்சைக்கு அழைத்து... மேலும் பார்க்க

நகைப்பட்டறை தொழிலாளி தற்கொலை

கோவையில் தங்க நகைப் பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை ஆா்.எஸ்.புரம் சுந்தரம் தெரு அருகே உள்ள டி.கே.தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (38). இவரது மனைவி சங்கரேஸ்வரி (33). சாமி ஐயா் ... மேலும் பார்க்க

கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

ஈரோடு - சேலம் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கோவை நகைக் கடையில் 88 பவுன் திருட்டு

கோவையில் நகைக் கடையில் 88.5 பவுன் நகைகளைத் திருடிய அதன் மேலாளா் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை வெரைட்டி ஹால் அருகே உள்ள சுவாமி ஐயா் புதுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா் மண்டல் ... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்குதல்: பெண் உயிரிழப்பு

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். கோவை வின்சென்ட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (55). இவா் திங்கள்கிழமை இரவு உக்கடம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது அந்த... மேலும் பார்க்க